US Recently ended

Thanthai Periyar's 148th Birthday Celebration

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், தந்தை பெரியாரின் 148-ஆம் பிறந்தநாள் விழா செப்டம்பர் 24 அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சமூக நீதி மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில், பெரியார் நினைவு ‘5k ஓட்டம்’, “ஏஅய் யுகத்தில் பெரியாரின் பங்களிப்பு” என்ற தலைப்பில் இளம் தலைமுறைக்கான பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றன.

Date
Sep 24, 2026
Status
Recently ended
Thanthai Periyar's 148th Birthday Celebration

Event summary

Highlights

  • பெரியார் நினைவு ‘5k ஓட்டம்’
  • இளம் தலைமுறைக்கான பேச்சுப்போட்டி: “ஏஅய் யுகத்தில் பெரியாரின் பங்களிப்பு”
  • சமூக நீதி நாள் உறுதிமொழி
  • ‘‘பெண்களின் காவலர் பெரியார்’’ உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள்
தந்தை பெரியாரின் 148-ஆம் பிறந்தநாள் விழா, பெரியார் இன்டர்நேஷனல் அமைப்பு, என்.ஆர்.டிஅய்.ஏ. மற்றும் திமுக வெளிநாடுவாழ் இந்தியர் அணி (தெற்கு பிரிவு) ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு, மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

விழாவில், சமூக நீதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரியார் நினைவு 5k ஓட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்காக நடத்தப்பட்ட “ஏஅய் யுகத்தில் பெரியாரின் பங்களிப்பு” என்ற தலைப்பிலான பேச்சுப்போட்டி அனைவரையும் கவர்ந்தது. மேலும், விழாவில் பங்கேற்ற அனைவரும் சமத்துவம் மற்றும் சமூக நீதியைக் காப்போம் என சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

‘‘பெண்களின் காவலர் பெரியார்’’, ‘‘பெரியாரும் சமூக நீதியும்’’, ‘‘சோசியல் சயன்டிஸ்ட்’’ பெரியார், மற்றும் ‘‘வீடுகளில் பெரியாரிசம்’’ போன்ற ஆழமான தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் உரையாடல்களும் விவாதங்களும் நடைபெற்றன. பெரியாரின் சிந்தனைகளை உலகளாவிய தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அமைந்த இந்த டல்லாஸ் கொண்டாட்டம், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரியார் கொள்கைகளின் தாக்கத்தை ஆழமாகப் பதித்துள்ளது.

Practical details

Before attending

Check the sources below for current opening times, admission prices and registration requirements. A date range does not mean the event runs continuously or that admission is free.

Sources and further information

Check these references for event announcements and updates before attending.

Location map

Approximate area only; exact venue coordinates are not confirmed.

Keep exploring

Use this event as a starting point for nearby places, matching topics, and calendar paths.