IN Recently ended

Gravitas Technology Intellectual Festival

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 'கிராவிடாஸ்' (Gravitas) எனப்படும் சர்வதேச தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை விழா செப்டம்பர் 18 முதல் 20 வரை நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுமார் 300 கல்வி நிறுவனங்களிலிருந்து 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

Date
Sep 18-20, 2026
Status
Recently ended
Gravitas Technology Intellectual Festival

Event summary

Highlights

  • 31 ஹேக்கத்தான்கள் மற்றும் 62 பயிலரங்குகள் உள்ளிட்ட 227 தொழில்நுட்ப நிகழ்வுகள்
  • 36 மணி நேர ஏஐ ஹேக்கத்தான் மற்றும் ஏஆர்/விஆர் விளையாட்டு அனுபவங்கள்
  • ரூ. 25 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள்
  • இந்திய ராணுவத்தின் போர் வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் (CVRDE) தொழில்நுட்பக் கண்காட்சி
இந்த ஆண்டு கிராவிடாஸ் விழாவில் மொத்தம் 227 நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 31 ஹேக்கத்தான்கள், 62 பயிலரங்குகள், 57 தொழில்நுட்பப் போட்டிகள் மற்றும் 10 தொழில்முனைவோர் சார்ந்த அமர்வுகள் எனப் பலதரப்பட்ட செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, 36 மணி நேர செயற்கை நுண்ணறிவு ஹேக்கத்தான் (Forge AI) மற்றும் AR/VR அனுபவங்கள் (Carniverse) இந்த முறை புதுமையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுகளும், 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளன. ரோபோ வார்ஸ், குவாட்காப்டர் போன்ற சாகச நிகழ்வுகளுடன், இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பங்களைக் காட்டும் சிவிஆர்டிஇ (CVRDE) கண்காட்சியும், 'மோட்டோவால்ட்' எனும் ஆட்டோ எக்ஸ்போவும் இந்த விழாவின் முக்கிய ஈர்ப்புகளாகும்.

இவ்விழாவில் வங்கதேச துணைத் தூதரக அதிகாரி முகமது அலிமுசமான், 'ஷார்க் டேங்க் இந்தியா' அமன் குப்தா மற்றும் காக்னிசன்ட் நிறுவனத்தின் முக்கியப் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். தொழில்நுட்பத் துறையில் மாணவர்களின் அறிவு மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரும் சர்வதேச தளமாக இந்த விழா அமைகிறது.

Practical details

Location described by the source
விஐடி பல் கலைக் கழகத் தில்
www.hindutamil.in
Area for browsing nearby events
வேலூர்

Before attending

Check the sources below for current opening times, admission prices and registration requirements. A date range does not mean the event runs continuously or that admission is free.

Sources and further information

Check these references for event announcements and updates before attending.

Location map

Approximate area only; exact venue coordinates are not confirmed.

Keep exploring

Use this event as a starting point for nearby places, matching topics, and calendar paths.